தெலங்கானாவில் சந்திரகேர்ராவ் தலைமையிலான
தெலங்கானா
ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கிறார்.
தெலங்கானாவில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை சந்திப்பதற்கு இப்போதே
காங்கிரஸ்
, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதால் சந்திரசேகர்ராவ் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து சாதனை புரிவதற்காக, இந்த தேர்தலில் அவர் பிரபல தேர்தல் வியூக அமைப்பு நிறுவனமான ஐபேக்குடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஐபேக்கின் நிறுவனத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், தற்போது அந்த பதவியில் இல்லை. இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான முயற்சியில்
பிரசாந்த் கிஷோர்
ஈடுபட்டு வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரசாந்த் கிஷோர் அதனாலே காங்கிரஸ் பக்கம் செல்கிறார் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால் சில பிராந்திய கட்சிகளையும், காங்கிரஸ் கட்சியையையும் ஒரே அணியில் கொண்டு வருவது சவாலான காரியமாக உள்ளது. இன்றைய தேதியில் அந்த பணியை பிரசாந்த் கிஷோரால் அவரது ஐ பேக் நிறுவனத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் பிற கட்சிகள் இணைவதற்கு சம்மதித்தாலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், தெலுகு தேசமும் வேறு மனநிலையில் இருந்தன.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்
திரிணாமூல் காங்கிரஸோடு பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தெலுகு தேசம் கட்சியுடன் ஐ பேக் நிறுவனம் இப்போது பணியாற்ற உள்ளது.
ஐபேக்
நிறுவனத்தில் பிரசாந்த் கிஷோர் இல்லை என்றாலும் தற்போதும் அது அவரது கட்டுப்பாட்டில், மேற்பார்வையில் தான் செயல்படுகிறது.
ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்த பின்னர் காங்கிரஸ் கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கொடுப்பது போல் மம்தா பேசினார். தற்போது சந்திரசேகர் ராவுடன் ஐபேக் நிறுவனம் இணைந்துள்ளதால் விரைவில் அவரிடமிருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கருத்துகள் வெளிவரலாம் என்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஐபேக் நிறுவனம் சந்திரசேகர் ராவுடன் ஒப்பந்தம் செய்தாலும் 2024 மக்களவைத் தேர்தலிலும் இது முக்கிய பங்காற்றப் போகிறது என்பது மட்டும் உண்மை.