அமெரிக்காவின் சந்திரனுக்கான மிஷன் பற்றிய மிக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நிலவில் அணு வெடிப்பு ஒன்றை நடத்த அமெரிக்கா, மிஷன் ஒன்றை திட்டமிட்டது என்று சில உளவுத்துறை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் த்ரெட் ஐடென்டிஃபிகேஷன் புரோகிராமின் (ஏஏடிஐபி) கீழ், அமெரிக்கா இந்தப் பணிக்காக நிறைய செலவிட்டது என்றூம் ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும் உளவு துறை ஆவணங்கள் தெரிவித்துள்ளன..
அமெரிக்காவின் முழு திட்டம்
அமெரிக்கா திட்டமிட்டிருந்த மிஷனில், புவியீர்ப்பு எதிர்ப்பு சாதனங்கள், அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்வதன் மூலம் சந்திரனுக்கு சுரங்கப்பாதை அமைத்தல் ஆகியவை அடங்கும். இருப்பினும், இப்போது AATIP செயலற்ற நிலையில் உள்ளது, தற்போது இந்த திட்டம் செயல்படவில்லை.
மேலும் படிக்க | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்
AATIP மேற்கொண்ட ஆய்வு
1600 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்தில், AATIP மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. AATIP ஒரு இரகசிய அமைப்பாக இருந்ததாகவும், அதன் முன்னாள் இயக்குநர் லூயிஸ் எலிசாண்டோ 2017 ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு துறை பென்டகனில் இருந்து ராஜினாமா செய்தபோது அது பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த நிலவு பயணத்திற்காக சுமார் 22 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
நிதி உதவி அளித்த அமெரிக்க பாதுகாப்புத் துறை
நிலவில் அணுகுண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்ட இந்த நிறுவனத்திற்கு, அமெரிக்க பாதுகாப்புத் துறை நிதியளித்தது. மேலும் பல முறை யுஎஃப்ஒக்கள் பற்றிய விவாதமும் உள்ளது. அமெரிக்கா சந்திரனின் மையத்தில் சுரங்கம் ஒன்றை தோண்ட விரும்பியதாக ஆவணம் கூறுகிறது. இதற்குக் காரணம் எஃகு போன்ற வலிமையான, ஆனால் அதைவிட 100,000 மடங்கு இலகுவான உலோகம் கண்டுபிடிக்கப்பட்டதே ஆகும். விண்கலத்தை உருவாக்க இது பயன்படுத்தப்படலாம் என்பதால், இந்த மிஷனை அமெரிக்கா மேற்கொண்டது.
இந்த பணியுடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் சந்திரனின் மையப்பகுதியை அடைந்து தெர்மோநியூக்ளியர் வெடிபொருட்களை வெடிக்க செய்து ஒரு சுரங்கப்பாதையை உருவாக்க திட்டமிட்டனர். ஆனால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
மேலும் படிக்க | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!