சென்னை: அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே துணை வேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்திலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது
அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது அரசு பல்கலை. துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் சென்னை பல்கலை. உள்பட 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து அரசுக்கு மாற்றப்படுகிறது.
இந்த மசோதாமீது பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தரை நியமிக்கும் ஆளுநருக்கு வழங்கக்கூடாது என நீதிபதி குழு கூறியுள்ளது என்றவர், பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசு நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்டாலின் சட்டமன்ற பேச்சு வீடியோ: https://twitter.com/i/broadcasts/1YpKkZEARWVxj
உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்சி ஆணைய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என தமிழக அரசும் விரும்புகிறார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே துணை வேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்திலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது, உயர்கல்வியில் பெரும் தாகக்த்தை ஏற்படுத்துகிறது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் வழங்கக் கூடாது என்று பூஞ்சி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை தமிழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமாக செயல்படுவதையே காட்டுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்கவேண்டும். மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது என்று குறிப்பிட்டார்.
#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vc-bill-speech25-04-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vc-bill-speech25-04-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vc-bill-speech25-04-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vc-bill-speech25-04-04.jpg) 0 0 no-repeat;
}