பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு நடைபெறுவதால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், கோச்சிங் முறையை ஒழிப்பதே நுழைவுத் தேர்வின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை பல்வேறு நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதன் அடிப்படையில் பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் 13 மொழிகளில் தேர்வு எழுதவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். ஒரே விண்ணப்பம் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கல்வி பயிலவும், கட்டணச்சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.