சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகளுக்கு தொற்று பரவியது. இதையடுத்து அங்கு சுகாதார தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 5 பேருக்கு மேலும் உறுதியாகி 60 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் 18 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 78 ஆக உயர்ந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுவரையில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… பாராளுமன்றம்-உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்: அமித்ஷா உத்தரவு