வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்: பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மீண்டும் தேர்வு மேக்ரான் மீண்டும் வெற்றி பெற்றார். பிரான்ஸ் 20 ஆண்டு கால வரலாற்றில் 2வது முறை ஒருவர் வெற்று பெறும் நபர் ஆவார் மேக்ரான்.
பிரான்ஸ் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரான், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரின் லீ பென் இடையே நேரடி போட்டி நிலவியது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் எல்.ஆர்.இ.எம்., எனப்படும், லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டுள்ள இமானுவேல் மேக்ரான், 58 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.
முக்கிய எதிர்க்கட்சியான நேஷனல் ரேலி கட்சியின் மரின் லீ பென், 42 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.
வெற்றி பெற்ற மேக்ரானுக்கு அமெரிக்க அதிபர் பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ், ஜெர்மன் , கனடா, இத்தாலி, ஸ்பெயின் நாட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .பைடன் தனது வாழ்த்து செய்தியில் உக்ரைன் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகளில் மேக்ரான் முழு துணையாக இருப்பார் என நம்புவதாக கூறியுள்ளார்.
Advertisement