மும்பை: காந்தி குடும்பத்தாரிடமிருந்து பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி, அப்போதைய மத்திய அமைச்சர் முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் தெரிவித்துள்ளார்.
பணமோசடி வழக்கில் மார்ச்2020-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் நிறுவனரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராணா கபூர் தற்போதுநீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுஉள்ளார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் செய்ததன் மூலம்ராணா கபூர், யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் பைனான்ஸ் (டிஎச்எப்எல்) விளம்பரதாரர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் ரூ.5,050 கோடி மதிப்பிலான நிதியை மோசடி செய்ததாக அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது.