புதிதாக 3 பேருக்கு தொற்று பாதிப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 14ம் தேதிக்கு முன்பு வரை, கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 14ம் தேதி மேற்கொண்ட சோதனையில் காரைக்காலைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று பாதித்து, வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர்.கடந்த 19ம் தேதி இருவரும், 21ம் தேதி ஒருவர் என 3 பேரும் குணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 318 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதுச்சேரியை சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பாதித்த 3 பேரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு 1,65,780 ஆக உயர்ந்ததுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.நேற்று முன்தினம் முதல் டோஸ் தடுப்பூசி 377 பேருக்கும், 2274 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி, 259 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 2910 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 9,62,850 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 6,93,325 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.