கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு துணிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 40 லட்சம் மதிப்பிலான துணிமணிகள் எரிந்து நாசமாகின.
நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் லிஜின் என்பருக்கு சொந்தமான பூட்டியிருந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து வெளியான புகையை கவனித்த ஒருவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அங்கு விரைந்த அவர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர்.
தீ காரணமாக அந்தக் கடையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. தீ விபத்து ஏற்பட்டபோது கடையின் உரிமையாளர் வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படும் நிலையில், மின் கசிவு காராணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காராணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.