ராய்ச்சூர், : ”மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை. ஆனால் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.ராய்ச்சூரில் அவர் நேற்று கூறியதாவது:
நாட்டின் பல்வேறு இடங்களின் நிலக்கரி சுரங்கத்திலிருந்து, கர்நாடகாவுக்கு நிலக்கரி வினியோகிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் சரி செய்வோம். காங்கிரசார் குற்றம் சாட்டுவது போன்று, மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை.நாட்டில் தினமும் அதிகபட்சம் 3.2 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து வந்த காஸ் நிறுத்தப்பட்டுள்ளதால், ஹைட்ரோ மின்சார உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.நிலக்கரி பயன்பாடு அதிகரித்துள்ளது. நிலக்கரி ஒரே நாளில் காலியாகிறது.விதிமுறைப்படி, மின் உற்பத்தி நிலையங்களில், 17 நாட்களுக்கு தேவையான அளவுக்கு, நிலக்கரி சேமிப்பு இருக்க வேண்டும். ஆனால் தற்போது எட்டு முதல் 10 நாட்களுக்கு தேவையானது மட்டுமே உள்ளது. இது முழுமையாக காலியாவதற்குள், சுரங்கங்களிலிருந்து வினியோகிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement