இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர். மனதிற்கு பிடித்தமான, மற்றவர்களை சிந்திக்க வைக்க கூடிய தரமான பதிவுகளை பகிர்வதும், போடுவதும் இவரின் வழக்கமான செயல்களில் ஒன்று.
இவரின் ட்வீட்டுகளுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. அந்த வகையில் தற்போது ஏராளமானோரை கவரும் விதமாக ஒரு போட்டோவினை பகிர்ந்துள்ளார். அதனையும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கினை டேக் செய்து, பகிர்ந்துள்ள புகைப்படும் ஒன்று வைரலாக பரவி வருகின்றது.
இது எந்தளவுக்கு எனில் இவர் பகிர்ந்த புகைப்படத்தினை இதுவரையில் 16.5K பேர் ரீட்வீட் செய்துள்ளனர், இதே 151.4K பேர் லைக் செய்துள்ளனர், பலரும் தங்களது கமாண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
வரான் பபெட்-ஐ முந்திய கௌதம் அதானி.. உலகின் 5வது பெரிய பணக்காரரானார் அதானி..!
என்ன ட்வீட் அது?
ஆனந்த் மகேந்திரா பதிவிட்டுள்ள அந்த புகைப்படமானது, மலையோரமாக உள்ள மண் பாதையில், மாட்டுவண்டியில் இருவர் படுத்து உறங்கிக் கொண்டுள்ளது போன்றும், அதனை ஓருவர் ஓட்டிச் செல்வது போன்றும் உள்ளது.
இந்த புகைப்படத்தின் கீழ் உண்மையான டெஸ்லா வாகனம். இதற்கு கூகுள் மேப் கூட தேவையில்லை, எரிபொருளும் தேவையில்லை. இதனால் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படாது. இதனை நாமே ஓட்டி செல்லலாம். இதில் நீங்கள் தூங்கலாம், ஓய்வெடுக்கலாம். ஆனால் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடலாம் என பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் தான் எலான் மஸ்க், ஆண்டுக்கு பல லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருபவர். சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் பெட்ரோல், டீசல் கார்களுக்கும் மாற்று மின்சார கார்கள் தான். இது தான் எதிர்காலத்திற்கு உதவும் என்ற நோக்கத்தினை உடையவர்.
இந்தியாவுக்கு பெஸ்ட்
ஆனந்த் மகேந்திராவின் இந்த பதிவுக்கு ட்விட்டரில் பலரும் தங்களது கருத்துகளை கூறி வரும் நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவர், குறிப்பாக இந்தியாவுக்கு இது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இது மிக சரியான விஷயமே. இப்போதும் நமது விவசாயிகள் இந்த டெஸ்லா வாகனத்தினை ரசிக்கின்றனர் என மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
மாட்டு வண்டிக்கு ஈடாகுமா?
இப்படி ஏராளமானவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், ஒரு சிலர் காலத்திற்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டும். டெக்னாலஜிக்கள் வேண்டும் என பதிவிட்டுள்ளனர். மேலும் நாம் ஏன் டெஸ்லாவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
டெஸ்லாவோ, மகேந்திராவோ எதுவாக இருந்தாலும், நாம் சிறு வயதில் பயணித்த மாட்டு வண்டிக்கு ஈடாகுமா? என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும்.
Anand mahindra tags elon musk on twitter & shows give the original tesla vehicle
Anand mahindra tags elon musk on twitter & shows give the original tesla vehicle/மிஸ்டர் எலான் மஸ்க்.. இது தான் உண்மையான டெஸ்லா வாகனம்.. ஆனந்த் மஹிந்திராவின் குறும்புத்தனமான பதிவு!