நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது.
இந்த வாரத்தில் பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளியாகவிருக்கும் நிலையில், அதற்கிடையில் சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்ற காரணிகள் என பலவும் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளன.
சீரிஸ் 4: புரோக்கர்கள் மூலமாகத் தான் வணிகம் செய்யணுமா.. ஆன்லைனில் செய்ய முடியாதா?
சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகளும் சரிவிலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
அன்னிய முதலீடுகள்
கடந்த ஏப்ரல் 22 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 2461.72 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1602.35 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதுவும் சரிவுக்கு ஒரு காரணமாக அமையலாம்.
ரூபாய் நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 10 பைசா குறைந்து, 76.58 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 76.48 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று காலை தொடக்கத்திலேயே சரிவிலேயே தொடங்கியிருப்பது, சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 361.28 புள்ளிகள் குறைந்து, 56,835.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.20 புள்ளிகள் குறைந்து, 17,125.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 710.77 புள்ளிகள் குறைந்து, 56,486.38 புள்ளிகளாகவும், நிஃப்டி 226.20 புள்ளிகள் குறைந்து, 16,945.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 737 பங்குகள் ஏற்றத்திலும், 1553 பங்குகள் சரிவிலும், 127 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, எஃப்.எம்.சி.ஜி பங்குகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் , பிபிசிஎல், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், ரிலீகேர் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்,எம்.சி.ஜி,பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும், மெட்டல்ஸ் 2% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பிபிசிஎல், பிரிட்டானியா, டாடா ஸ்டீல், ஹெச்.யு.எல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஹெச்.யு.எல், டெக் மகேந்திரா, விப்ரோ, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்றே சரிவில் தொடங்கிய சந்தையானது, தற்போது 9.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 604.37 புள்ளிகள் குறைந்து, 56,592.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 197.5 புள்ளிகள் குறைந்து, 16,974.5 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex falls 600 points, nifty trade below 17,000; Focus in ICICI bank
opening bell: sensex falls 600 points, nifty trade below 17,000; Focus in ICICI bank/முதல் நாளே பெருத்த ஏமாற்றம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு.. கவனிக்க வேண்டிய ஐசிஐசிஐ வங்கி!