ஜெய்ப்பூர்: மே 13,14,15-ம் தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தல், 5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் ஆலோசிக்க உள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கட்சியை மறுசீரமைப்பு செய்தல், வலுப்படுத்துதல், தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.