செய்தி சுருக்கம்:
- ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராட இதுவரை மொத்தமாக அமெரிக்கா 1122 மில்லியன் டாலர்கள் உதவி.
-
ராணுவ நிதியுதவியை கண்டித்து அமெரிக்காவிற்கு ரஷ்யா கடிதம்.
- அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ராணுவ நடவடிக்கையை அதிகரிக்க தான் செய்யும்.
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை ரஷ்யா கடுமையாக எதிர்கிறது என அந்த நாட்டின் அரசு அதிகாரி அனடோலி அன்டோனோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்ய இடையிலான ராணுவ மோதல் 60 நாள்களை கடந்தும் தாக்குதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு வருகிறது.
இந்தநிலையில், உக்ரைனின் போர் அத்துமீறல்களை பார்வையிடுவதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்(Lloyd Austin) இருவரும் தலைநகர் கீவ்-விற்கு வந்தனர்.
இந்த சந்திபின் முடிவில், செய்தியாளர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன் அமெரிக்கா உட்பட 15 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 713 அமெரிக்க டாலர்களை வழங்க இருப்பதாக உறுதியளித்தார், இதில் அமெரிக்கா மட்டும் 322 அமெரிக்க டாலர்கள் வழங்கவதாக பிளிங்கன் தெரிவித்தார்.
மேலும் இந்த மாத தொடகத்தில் ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு தேவைப்படும் ராணுவ உதவிக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) அறிவித்த 800 மில்லியன் அமெரிக்க டாலருடன் சேர்த்து அமெரிக்கா மட்டும் இதுவரை 1122 டாலர்களை உக்ரனுக்கு வழங்க முன்வந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு பணத்தை வாரி வழங்கிய அமெரிக்கா…புடின் குறிக்கோளில் தோற்றுவிட்டார்: பிளிங்கன் கருத்து!
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதக்களை வழங்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாக ரஷ்யாவின் அரசு அதிகாரி அனடோலி அன்டோனோவ் Rossiya 24 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராஜதந்திர கடிதங்கள் அமெரிக்காவிற்கு ரஷ்யா அனுப்பி இருப்பதாகவும், அமெரிக்காவின் இத்தகைய ஆயுத வழங்கல் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளின் தீவிரத்தை அதிகமாக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்திக்கான வளம்: CNA