லண்டனிலுள்ள 600,000 பவுண்டுகள் மதிப்புடைய வீடு ஒன்றிலிருந்து, சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பெண் ஒருவர் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டதையடுத்து அக்கம்பக்கதவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
Bermondsey என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆம், அந்த வீட்டின் படுக்கையறை ஒன்றில், மூன்று பெண்களும் ஒரு ஆணும் கத்திக்குத்துக்காயங்களுடன் கிடந்துள்ளார்கள். மருத்துவ உதவிக்குழுவினர் அவர்களைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் வீணாக, அவர்கள் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவலைல் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரும் நிலையில், அவரும், கொலை செய்யப்பட்ட நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது.
இந்நிலையில், லண்டன் மேயரான சாதிக் கான், நேற்று இரவு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தான் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.