விராட் கோலி வலுவாக மீண்டு வருவார் – பெங்களூரு பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேட்டி

மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் 33 வயதான விராட் கோலி ரன் எடுக்க முடியாமல் தடுமாறுவது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. நடப்புதொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் 8 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதுவும் கடைசி இரு ஆட்டங்களில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக்-அவுட் ஆகியிருக்கிறார்.

அவரது பார்ம் குறித்து பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘கோலி, இந்த சீசனில் தொடக்கத்தில் நன்றாகத் தான் ஆடினார். புனேயில் கிட்டத்தட்ட வெற்றிக்குரிய ரன்னை அடிக்கும் நிலைக்கு வந்தார். அதன் பிறகான ஆட்டங்களில் ரன்-அவுட் மற்றும் பேட்டில் சரியாக ‘கிளிக்’ ஆகாதபந்துகளில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு கடினமான கட்டமாக உள்ளது. எல்லா வீரர்களுக்கும் இது போன்ற நிலைமை வரத்தான் செய்யும். விரைவில் அவர் வலுவான வீரராக மீண்டு வருவார். 
கோலியைபொறுத்தவரை எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். உடல்தகுதியை மேம்படுத்துவது, பயிற்சி, தேவையான நேரத்தில் ஓய்வு எடுப்பது என்று அனைத்தையும்சரியாகசெய்வதால், தனக்குள் நெருக்கடி வராமல் பார்த்துக் கொள்கிறார். இப்போது அவருக்கு தேவை கொஞ்சம் அதிர்ஷ்டம். நிலைத்து நின்று
விட்டால் அதன் பிறகு நிச்சயம் பெரிய ஸ்கோர் குவித்து விடுவார் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.