அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு குடும்பத்தினருக்கு வீட்டின் கீழ்த்தளத்தில் குறட்டை போன்ற ஒலி கேட்டும் அது பற்றி அறியாத நிலையில், குறட்டை போன்று ஒருவகையான ஓசை கேட்ட நிலையில், தங்கள் கற்பனையாக இருக்கக்கூடும் எனக் கருதி அது எங்கிருந்து வருகிறது என்பதை அறியாமலேயே விட்டுவிட்டனர்.
ஒருநாள் திடீரென வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள இடத்தைப் பார்த்தபோது ஒரு தாய்க்கரடியும் 4 குட்டிகளும் அங்கிருந்ததையும் அவை உறக்கநிலை முடிந்து வெளியே செல்லத் தயாராக இருந்ததையும் கண்டனர்.
அப்போதுதான் இத்தனை நாட்களாகக் கேட்ட ஒலிக்கான காரணம் அவர்களுக்குப் புரிந்துள்ளது. இதையடுத்துத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவற்றைக் காட்டுக்குள் கொண்டுபோய் விட்டனர்.