ஆப்பிள்
நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை சிறந்த தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் ஐபோன்14 ஸ்மார்ட்போன் மாடல்களை சந்தைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியாகக் காத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தகவல்கள் பல கசிந்து வருகின்றன. இப்போது நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, ஆப்பிள் தனது புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை முற்றிலும் புதிய அம்சங்களுடன் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
அடுத்தத் தலைமுறை ஆப்பிள்
ஹோம்போட்
ஸ்மார்ட் ஸ்பீக்கரில் பயனர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புது அம்சம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் புதிய ஹோம்போட் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே உடன் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போன் இன்னும் வெளியாகல; அதுக்குள்ள லீக்கான விலை விவரங்கள்!
புதிய தலைமுறை ஹோம்போட்
புதிய ஹோம்பாட் ஸ்பீக்கரில் பேஸ் ஐடி வசதி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், இதில் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த டிவி ஓஎஸ் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய ஹோம்போட் ஸ்பீக்கர் ஸ்மார்ட் டிவி பாக்ஸ் போன்று செயல்படும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல்,
பேஸ்டைம்
உரையாடல்களை இயக்க ஏதுவாக ஆப்பிள் நிறுவனம் தனது ஹோம்போட் ஸ்பீக்கரில் கேமராவை வழங்கலாம். இதன்மூலம் டிவியின் இணைத்தப்படியே வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த அம்சங்கள் புதிய ஹோம்பாடில் இருந்தால், சந்தையில் இருக்கும் கூகுள் Nest Hub Max, அமேசான் Echo Show போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கு நேரடிப் போட்டியாக இருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் இதுவரை Facetime உடன் வெளியாக இருக்கும் புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் குறித்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை வெளியிடவில்லை. எனினும், புதிய ஸ்பீக்கர்களுக்கான டீசரை நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!
வெளியான ஐபோன் 14 அம்சங்கள்
புதிய சேட்டிலைட் மெசேஜிங் அம்சத்தை புதிய ஐபோன் 14 தொகுப்பில் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம், சிம் கார்டின் அணுகல் இல்லாமல், அவசர காலத்தில் பயனர்களை குறுந்தகவல் அனுப்ப அனுமதிக்கும். மேலும், விரைவில் அறிமுகமாகும் புதிய ஐபோன் 14 விலை சற்று அதிகமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ16 பயோனிக் சிப்புடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் தொகுப்பில், மினி ரகம் இருக்காது எனக் கூறப்படுகிறது. இ-சிம்மை பிரதானமாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் எனத் தெரிகிறது.
ஐபோன் 14 குறித்த உங்கள் எதிர்பார்ப்புகளை கருத்துகளாக கீழே பதிவிடுங்கள்