பெங்களூரு
கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே ஹிஜாப் சர்ச்சை இருந்து வந்தது. முதலில் அங்குள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அப்படியே அந்தத் தடை வேறு சில அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அமர்வு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவித்தனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த் நிலையில் இப்போது அங்கு புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியின் செயல் சலசலப்பை உருவாக்கி உள்ளது. அதாவது தங்கள் பள்ளிகளில் புனித நூலான பைபிளை எடுத்துச் செல்வதை எதிர்க்க மாட்டோம் என்று பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சில வலதுசாரி குழுக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது கர்நாடக கல்விச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக வலதுசாரி அமைப்புகள் சாடியுள்ளன
அந்த பள்ளியின் +1 மாணவர் சேர்க்கை படிவத்தில், “உங்கள் குழந்தை தார்மீக மற்றும் ஆன்மீக நலனுக்காக மார்னிங் அசெம்பிளி ஸ்கிரிப்ச்சர் கிளாஸ் மற்றும் கிளப்கள் உட்பட அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்வார்கள் என்றும் அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்றும் உறுதி அளிக்கிறோம். அவர் கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த காலத்தில் பைபிள் வைத்திருப்பதையும் எதிர்க்க மாட்டோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்து ஜனஜக்ருதி சமிதி மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா
இந்த பள்ளி கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களை பைபிளை படிக்க வற்புறுத்துகிறது” என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
இருப்பினும், பள்ளி நிர்வாகம் தாங்கள் பைபிள் அடிப்படையிலான கல்வியை வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளது.