டெல்லி: தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 16 யூடியூப் செய்தி சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் 10 இந்திய யூடியூப் சேனல்களும், 6 பாகிஸ்தான் சேனல்களும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.