டி.வி, ஆடைகள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்டதாக வெளியான தகவல்களுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் அப்பளம், வெல்லம், பவர் பேங்க், கடிகாரம், தோல் பொருட்கள் உள்ளிட்ட 143 பொருட்களில் 92 சதவீத பொருட்களின் வரியை 18-ல் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கவும், அதுகுறித்து மாநில அரசுகளிடம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கருத்து கேட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை என கவுன்சில் தெரிவித்துள்ளது.
பாதிக்கு மேற்பட்ட பொருட்களை 28 சதவீத ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் கொண்டு வரும் திட்டமில்லை என்றும், வரி விகிதத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு அதுகுறித்து எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.