தன் மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷின் கெரியரை காலி செய்யும் வேலையில்
லதா ரஜினிகாந்த்
ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அணுகி தனுஷை வைத்து யாரும் படம் பண்ண வேண்டாம் என்றாராம்.
இந்நிலையில் தனுஷை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. இரண்டு பான் இந்திய படங்களில் வேறு நடிக்கிறார். மேலும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பாலிவுட் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்
தனுஷ்
.
இது தவிர்த்து ரஜினியை வைத்து தலைவர் 169 படத்தை இயக்கவிருக்கும் நெல்சன் திலீப்குமாருக்கும் தனுஷை தன் படத்தில் நடிக்க வைக்கும் ஆசை வந்திருக்கிறதாம்.
தனுஷை சந்தித்து கதை சொல்லியிருக்கிறாராம் நெல்சன். ஆனால் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகியிருப்பதால் நெல்சனுக்கு இன்னும் தனுஷ் பதில் சொல்லவில்லையாம்.
தனுஷுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிவதை பார்த்தால் லதா ரஜினிகாந்தின் பேச்சை யாரும் கேட்கவில்லை என்று தெரிகிறது. இல்லை என்றால் ஆயிரம் தான் இருந்தாலும் மருமகனாச்சே என்று லதா இறங்கி வந்திருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.
இதற்கிடையே ரஜினியின் ஆதரவு இல்லாவிட்டாலும் எங்கள் அண்ணனின் கெரியர் பாதிக்காது என்று நாங்கள் சொன்னது தான் நடக்கிறது என்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.
தீராக் காதல்: ஐஸ்வர்யா ரஜினியின் வாழ்வில் மேலும் ஒரு புது வரவு