Tamil Nadu News Updates: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றி. பெரும்பான்மையான வாக்குகளை பெற்று 2 ஆவது முறையாக வெற்றி வாகை சூடினார்.
இன்று செய்முறை தேர்வுகள் தொடக்கம்
10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடக்கம். தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்
பெட்ரோல்,டீசல் நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 19வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85க்கும், டீசல் ரூ100.94க்கும் விற்பனையாகிறது.
தொடரும் மின்வெட்டு! தி.மு.க தான் காரணமா?
குரூப் 4 தேர்வு: இதுவரை 13.17 லட்சம் பேர் விண்ணப்பம்
குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13.17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் என TNPSC தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தொடங்கியது . கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை, நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ15 கோடி செலவில் கூடுதல் கட்டடம். பூமி பூஜையுடன் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
CUET தேர்வால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது. பல்வேறு நிபுணர்களுடன் விரிவான கலந்தாய்வு செயல்முறைகளுக்கு பிறகே CUET தேர்வு இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இலங்கையில் இருந்து மேலும் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் தனுஷ்கோடி வருகை. பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதிக்கு வந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து தொடர்ந்து தமிழர்களின் வருகை அதிகரிப்பு
பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து. இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவை பலப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்து. ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 279 மற்றும் ரயில்வே சட்டப்பிரிவு 151,154 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை செய்து அவரது மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை மற்றும் ரூ20 ஆயிரம் கொள்ளை . கொலை செய்யப்பட்ட நபர் 52 வயதான முன்னாள் ஜமாத் தலைவர் முகமது நிஜாம். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு