கடந்த ஏப்ரல் 23ம் தேதி, 25வது உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக டுவிட்டர் சமூக வலைதளத்தில் ‛புக் ரீடர்ஸ் ஸ்பேஸ் மாரத்தான்’ (Book Readers Space Marathon) என்னும் ‛டுவிட்டர் ஸ்பேசஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உமை (டுவிட்டர் முகவரி: @umayasho) என்பவர் முன்னெடுத்துச் சென்ற இந்நிகழ்ச்சியை உலகின் பல திசைகளில் வாழும் தமிழ் மக்களின் வரவேற்புடன் நடந்தேறியது. பலதரப்பட்ட தலைப்புக்களில், ஆர்வமூட்டும் வகையில், எழுத்துத் துறையில் சிறந்த எழுத்தாளர்களுடனும், வாசிப்பில் மூழ்கித் திளைக்கும் வாசகர்களுடனும், ஏப்.,22 நள்ளிரவு 12 மணி முதல் ஏப்.,23ம் தேதி நள்ளிரவு 12 மணியையும் கடந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
மொத்தம் 146 பேர் கலந்துரையாடிய இந்த டுவிட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் 3,541 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் நர்சிம், ராகவன், சிறார் இலக்கிய எழுத்தாளர் விழியன், மேகலா ராம்மூர்த்தி மற்றும் கல்வியாளர் எஸ்.கே.பி.கருணா போன்றவர்கள் கலந்துகொண்டு வாசகர்களை ஊக்கப்படுத்தினர். டுவிட்டர் ஸ்பேசில் முதன்முறையாக நடைபெற்ற இந்த 24 மணிநேர தொடர் கலந்துரையாடல் ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
Advertisement