அகமதாபாத்: பிரதமர் மோடியை பற்றி டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை கடந்த 19 ம் தேதி குஜராத்தில் வைத்து அசாம் போலீசார் கைது செய்தனர். அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அவமதித்தல், சதிச் செயல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ராஜ்ஹார் நீதிமன்றம் ஜிக்னேஷ்க்கு நேற்று ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளி வந்த நிலையில், மீண்டும் அசாம் போலீசார் அவரை மீண்டும் வேறொரு வழக்கில் கைது செய்தனர்.