காரைக்கால், :அகலங்கண்ணு அரசலாறு தடுப்பணையை ரூ.4.32 கோடி மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.காரைக்கால் மாவட்டத்தில் மொத்த விவசாயமும் காவிரி ஆற்று நீர் பாசனத்தையே சார்ந்துள்ளது. கல்லணையிலிருந்து காரைக்காலுக்கு வரும் காவிரி நீர், நல்லம்பல் ஏரியில் தேக்கப்படுகிறது.பின், அகலங்கண்ணு அரசலாறு தடுப்பணையில் இருந்து பல இடங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.தற்போது, அகலங்கண்ணு தடுப்பணையில் கான்கிரீட் தரைதளம் சேதமடைந்துள்ளது. இதனால், நபார்டு வங்கி நிதியுதவியில் தடுப்பணையின் குறுக்கு சுவர், கான்கிரீட் தரைதளம் மற்றும் கான்கிரீட் தடுப்புக் கட்டை அமைக்கும் பணிகள், அகலங்கண்ணு கிராமத்திலிருந்து செட்டிக்கோட்டம் சிற்றேரி வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ.4.32 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. சிவா எம்.எல்.ஏ., கலெக்டர் அர்ஜூன் சர்மா பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement