ரஷ்யாவின் ஐந்து கோடீஸ்வரர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொடர்பிருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான ஐந்து கோடீஸ்வரர்கள் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். அதில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், இருவர் கத்தியால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ள நிலையிலும் காணப்பட்டனர்.
மட்டுமின்றி, மரணமடைந்த நால்வர் எரிவாயு தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருவர் மருந்து தொடர்பான துறையில் தொழில் செய்து வருகிறார்.
இந்த ஐவர் மரணத்தில் மர்மம் நீடித்து வந்த நிலையில், ஐவரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், ஐவர் மரணத்திலும் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு அடுத்த நாள், பிப்ரவரி 25ம் திகதி 61 வயதான Alexander Tyulakov தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மூன்று வாரங்களுக்கு முன்புதான் 60 வயதான Leonid Shulman என்பவர் அவரது குளியல் அறையில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும், 51 வயதான Vladislav Avayev மாஸ்கோவில் உள்ள தமது சொகுசு இல்லத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
இதன் அடுத்த சில நாட்களில், 55 வயதான Sergey Protosenya என்பவர் ஸ்பெயின் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த ஐவர் மரணமும் தொடர்புடையது என்றே கூறப்படுகிறது. இதில் நால்வர் எரிவாயு துறையில் தொழில் செய்பவர்கள் எனவும், அந்த நால்வரின் மரணத்திலும் மர்ம இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் தொடர்பில் கடும் பின்னடைவை ரஷ்யா எதிர்கொண்டு வரும் நிலையில், இவர்கள் விளாடிமிர் புடின் தொடர்பில் உண்மையை வெளியே கூறலாம் என்ற அச்சத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், தமக்கு அச்சுறுத்தலாக மாற வாய்ப்புள்ள, நெருக்கமான செல்வந்தர்களை விளாடிமிர் புடின் தரப்பு கொலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.