ஆந்திராவில், தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதால், இறந்த மகனின் உடலை, தந்தை 90 கிலோமீட்டர் தூரம் பைக்கில் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னமய்யா மாவட்டம் சிட்டிவேலை சேர்ந்த சிறுவன் ஜெஸ்வா, சிறுநீரக கோளாறு காரணமாக திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டதால் செய்வதறியாத அவரது தந்தை, மகனின் உடலை திருப்பதியில் இருந்து சிட்டிவேலுக்கு சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு சென்றார்.
இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.