நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ், தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு முதலீடுகளை செய்து வருகின்றது.
அந்த வகையில் ஏற்கனவே அறிவித்திருந்த அபுதாபி கெமிக்கல்ஸ் டெரிவேட்டிவ்ஸ் கம்பெனி RSC லிமிடெட் (TA’ZIZ) நிறுவனத்துடன், 2 பில்லியன் டாலர் முதலீட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
TA’ZIZ இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக, அபிதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் (ADNOC) மற்றும் ADQ நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் குழுமமும் முதலீடு செய்யவுள்ளது.
பேடிஎம் போல செல்ல விரும்பவில்லை.. எல்ஐசி ஐபிஓ தாமத்திற்கு இது தான் காரணமா?
என்ன உற்பத்தி?
இந்த இணைப்பின் மூலம் இந்த கூட்டணியானது குளோர் – ஆல்கலி, எத்திலீன் டைகுளோரைடு(EDC) மற்றும் பாலிவினைல் குளோரைடு (PVC) உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யவுள்ளது. இந்த கெமிக்கல்கள் முதல் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உற்பத்திய செய்யப்படவுள்ளன. இது புதிய வருவாய் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் வாய்ப்புகளை கொடுக்கும்.
வலுவான உறவுக்கு அடித்தளமாக அமையும்
இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, TA’ZIZ EDC மற்றும் PVC கூட்டு முயற்சியானது விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கூட்டு முயற்சியானது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவுகளுக்கு ஒரு சான்றாகும்.
எங்கு?
அபுதாபியில் இருக்கும் அல் ருவைஸ் பகுதியில் இருக்கும் தொழிற்பேட்டையில் இந்த TA’ZIZ ஆலை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு நிலவரம்?
இந்த ஒப்பந்த அறிவிப்பின் மத்தியில் இப்பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 2.99% அதிகரித்து, 2775.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2795 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 2707.70 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2802 ரூபாயாகவும், 52 வார குறைந்தபட்ச விலை 1906 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலை 3% அதிகரித்து, 2775.70 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2795.65 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 2708 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2800.65 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1906.50 ரூபாயாகும்.
RIL’S mukesh ambani signs shareholder agreement with TA’ZIZ for 2 billion dollar investment
RIL’S mukesh ambani signs shareholder agreement with TA’ZIZ for 2 billion dollar investment/அபுதாயில் முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி.. $2 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெப்பம்..!