வாஷிங்டன்:
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. அதிபர் ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு கமலா ஹாரிசுக்கு எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு துணை அதிபர் இல்லத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவார். தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஹாரிஸ் தற்போது நலமுடன் உள்ளார். கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றும் அவர் உறுதியான பரிசோதனைக்கு பின் வெள்ளை மாளிகை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.