திருச்சி தேவநேரியில், கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருநெடுங்குளம் ஊராட்சியின் தலைவராக உள்ள ஸ்ரீநிதி, கிராம சபைக் கூட்டத்தில் அன்பில் மகேஷை வரவேற்று மலர்கொத்து கொடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், கட்சியின் மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழலில், அதிமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற ஸ்ரீநிதியை அதிமுகவினர் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர், ப.குமாரிடம் கேட்டபோது, ‘ நீங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள்? உங்களை கட்சியை விட்டு நீக்கச் சொல்லி ஏற்கனவே பரிந்துரை அளித்துவிட்டோமே’ என்று கூறியுள்ளார். ஸ்ரீநிதி ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிக்கலாம்: ”உட்காருடா! என்று எங்கள் எம்.எல்.ஏவை பேசினார்கள்”- வெளிநடப்பு குறித்து அதிமுக பகீர் புகார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM