VK sasikala Who start political tour soon: திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவிடம், உங்களுடைய அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கெள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று அதிரடியாக பதிலளித்தார்.
ஜெயலலிதாவின் நெறுங்கிய தொழியான சசிகலா, அதிமுகவை கைப்பற்ற சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார். இதனிடையெ, சசிகலா தமிழகம் முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சென்னையில் உள்ள சசிகலா இல்லத்தில், தனிப்படை போலீசார் 2 நாட்கள் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சசிகலா இன்று (ஏப்ரல் 26) சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம், அரசியல் மற்றும் கோடநாடு வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக விரைவில் மேல்முறையீடு செய்வேன்’ என்று கூறினார். கோடநாடு வழக்கு தொடர்பான கேள்விக்கு சசிகலா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, சசிகலா, திருக்கடையூர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலாவிடம், உங்களுடைய அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சசிகலா, “இங்கு தான் இருக்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என பதிலளித்தார்.
இதையடுத்து, உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை டிடிவி.தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, நேரடியாக பதில் அளிக்க மறுத்த வி.கே.சசிகலா “கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து பிறகு பதிலளிக்கிறேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“