அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை: அமைச்சர் வெளியிட்ட தகவல்



எதிர்காலத்தில் நிச்சயமாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், தனது அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி குறைவினால் சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் சம்பளம் உட்பட ஏனைய தேவைகளுக்கு சம்பளம் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்படி ஒரு பிரச்சினை உள்ளதா என ஊடகவியலாளர் அமைச்சரிடம் வினவியுள்ளார்.

50,000 சம்பளம் பெற்றவருக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அப்போது பொருட்களின் விலை சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த மனிதன் உயிர் பிழைக்க கடுமையான போராட்டத்தில் ஈடுபட வேண்டியுள்ளது.

மறுபுறம், மேலதிக நேர ஊதியத்தை முடிந்தவரை குறைக்குமாறு எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நான் சுகாதார செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்தேன். அது ஏற்கனவே நெருக்கடியில் உள்ள மக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி விடும்.

அதனால் தற்போதைக்கு அப்படியெல்லாம் செய்யாமல் முடிந்தவரை அடுத்த சில மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் தொடர்வோம். தற்போதைய நிலையில் அமைச்சில் ஒதுக்கீடு இருப்பதே பிரச்சனையாக மாறியுள்ளது.

பொதுவாக நிதி அமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு செலவு செய்ய ஒரு வரம்பு உள்ளது. செலவுகள் அதிகரிப்பால், சில நாட்களில் அந்த ஒதுக்கீட்டை எல்லாம் தாண்டிவிடும். அப்படியானால் கடந்த சில மாதங்கள் எப்படி இருக்கும் என சுகாதார அமைச்சுக்கு கேள்வி எழுந்துள்ளது.

எனவே எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், நாங்கள் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அடுத்த சில வாரங்களில் நிதி அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொள்வார் என்று நான் நினைக்கிறேன். இல்லையெனில், சுகாதாரத் துறை மட்டுமல்ல, நாட்டின் பிற துறைகளும் வீழ்ச்சியடையக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.