அலரி மாளிகையைச் சுற்றி தற்போது பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடன் பதவி விலகவேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அலரி மாளிகையைச் சுற்றியும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குறித்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.