ஆந்திராவில் திருமணத்திற்கு தடையாக இருந்த மாமன் மகள் கழுத்து அறுப்பு..!

ஆந்திரா: 
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவாதி (வயது 19). இவரது அத்தை மகன் அப்பா கொண்டல் ராவ். சிறு வயது முதலே சுவாதிக்கும், அப்பா கொண்டல் ராவுக்கும் திருமணம் செய்து வைப்பது என அவர்களது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் அப்பா கொண்டால் ராவ்,வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்து இருந்தார். இதனால் மனவேதனை அடைந்த சுவாதி அப்பாகொண்டல் ராவிடம் சென்று என்னை திருமணம் செய்யாமல் வேறு ஒரு ஒரு பெண்ணை ஏன் திருமண நிச்சயம் செய்தார் என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தனது திருமணத்திற்கு சுவாதி தடையாக இருப்பாரோ என அப்பா கொண்டல் ராவ் எண்ணினார்.
இதனால் அச்சமடைந்த அப்பா கொண்டல் ராவ் அதே பகுதியை சேர்ந்த நாகேஸ்வரராவ் (35) என்பவரிடம்  ரூ.10 ஆயிரம் கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
நேற்று அதிகாலை சுவாதி மற்றும் அவரது பாட்டி வீட்டின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாகேஸ்வரராவ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவாதியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 
இதில் படுகாயமடைந்த சுவாதியின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சுவாதி வலியால் அலறி துடித்தார். இதை கேட்ட சுவாதியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுவாதியை மீட்டு சிகிச்சைக்காக அனகா பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுவாதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அனகாபள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமாராவ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகேஸ்வர ராவை கைது செய்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.