இந்தமுறை தனுஷ் ரசிகர்களை சமாளித்த நெட்பிளிக்ஸ் – வெளியானது ‘தி கிரே மேன்’ மாஸ் அப்டேட்!

‘தி கிரே மேன்’ திரைப்படம் வருகிற ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாவதாக நடிகர் தனுஷ், தனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தடுத்து நடித்து வருவதுடன், பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இதையடுத்து ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரே மேன்’ (The Gray Man) ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து வந்தார்.

image

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்காக நடிகர் தனுஷ் சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். அந்தப் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ், சுமார் 1500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

image

இந்தப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி மிரட்டலாக வெளியானது. ஆனால், அதில் தனுஷ் இல்லாததால், தனுஷ் சம்பந்தமான காட்சிகளை வெளியிடுமாறு அவரது ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட் செய்து வந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நெட்ஃபிளிக்சில் இன்று வெளியானது. ஆனால் வழக்கம்போல் அதில் நடிகர் தனுஷ் இல்லை.

image

எனினும், நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ட்விட்டர் பக்கத்தில், நடிகர் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முதன்முதலாக வெளியிட்டு, ‘தி கிரே மேன்’ படத்தில் நடிகர் தனுஷ், வேற மாறி வேற மாறி என்று பதிவிட்டுள்ளது. இதேபோல் தான் நடித்துள்ள ‘தி கிரே மேன்’ திரைப்படம் வரும் ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அத்துடன் படத்தின் தனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும்  வெளியிட்டுள்ளார். இதனை நெட்ஃபிளிக்ஸ் ரீ-ட்வீட் செய்துள்ளது. 

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.