இந்தியனுக்காக இந்தியாவில் இருந்து தயார் செய்யப்பட்ட பட்ஜெட் போன்!

உள்நாட்டின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான
மைக்ரோமேக்ஸ்
தனது மலிவான கைபேசியை அறிமுகப்படுத்தி உள்ளது. நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான மைக்ரோமேக்ஸ் இன் 2சி-ஐ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. மலிவான விலையில் இந்த போன் டெக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 2சி
ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுக தின சலுகையாக போனை வெறும் ரூ.7,499க்கு வாங்க முடியும். புதிய மைக்ரோமேக்ஸ் போன் சந்தையில் இருக்கும் ரெட்மி 9 சீரிஸ், டெக்னோ ஸ்பார்க் 8 போன்ற ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக போட்டியிடும். இந்திய தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 2சி அம்சங்கள் (Micromax In 2C specs)

இந்த ஸ்மார்ட்போனில் 6.52″ இன்ச் HD+ டிஸ்ப்ளே டிராப் நாட்சுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிக்சல் ரெசலியூஷன் 1600×720 ஆக உள்ளது. 420 நிட்ஸ் பிரைட்னஸை இந்த டிஸ்ப்ளே ஆதரிக்கிறது. Micromax In 2C ஆனது Unisoc T610 புராசஸர் கொண்டு இயக்கப்படும். இது 1.8GHz வேகம் கொண்ட ஆக்டாகோர் புராசஸர் ஆகும்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இதில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படும் என நிறுவனம் உறுதி அளித்துள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டேரோஜ் மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.

கிரியேட்டர்கள் வாழ்வில் விளக்கேற்றிய இன்ஸ்டாகிராம்!

மைக்ரோமேக்ஸ் இன் 2சி கேமரா (Micromax In 2C Camera)

இதில் இரட்டை பின்பக்க கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 8MP மெகாபிக்சல் முதன்மை சென்சாரும், கூடவே இரு VGA சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 5MP மெகாபிக்சல் கேமரா இதில் நிறுவப்பட்டுள்ளது.

ப்ளூடூத், வைஃபை, டைப்-சி, இரட்டை 4ஜி சிம், டெடிகேட்டட் மெமரி கார்டு ஸ்லாட் போன்ற இணைப்பு ஆதரவினையும் இந்த ஸ்மார்ட்போன் பெறுகிறது. போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான மைக்ரோமேக்ஸ் IN 2B ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாகும்.

கழிப்பறையை விட போனில் அதிகளவு கிருமிகள் – இன்பினிக்ஸ் Smart 6 அளித்த தீர்வு!

மைக்ரோமேக்ஸ் இன் 2சி விலை (Micromax In 2C Price)

Micromax IN 2C ஸ்மார்ட்போனின் 3GB RAM + 32GB Storage மெமரி வேரியண்டின் விலை ரூ.8,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறிமுக தின சலுகையை நிறுவனம் வழங்கியுள்ளது.

மே 1ஆம் தேதி பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நாளில் ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு நேரடியாக ரூ.1000 சலுகை வழங்கப்படுகிறது. சலுகையை கழித்தால் வெறும் ரூ.7,499க்கு புதிய மைக்ரோமேக்ஸ் போனை வாங்கலாம்.

நோக்கியா இடத்திற்கு குறி: நறுக்குணு ரெண்டு பட்ஜெட் போன் – ரெட்மி 10ஏ; 10 பவர் அறிமுகம்!

மைக்ரோமேக்ஸ் இன் 2B

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மைக்ரோமேக்ஸ் IN 2B போனை நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இதில் 6.52″ இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் Unisoc T610 புராசஸர் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 64GB வரை ஸ்டோரேஜ் மெமரியும் வழங்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் இயக்கப்படுகிறது.

கேமராவைப் பொருத்தவரை 13MP மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் புகைப்படம் எடுப்பதற்கான இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் தற்போது பிளிப்கார்ட்டில் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Micromax-IN-2C விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Unisoc T610டிஸ்பிளே6.52 inches (16.56 cm)சேமிப்பகம்32 GBகேமரா8MP + Depth Cameraபேட்டரி5000 mAhஇந்திய விலை8499ரேம்3 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.