புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது நோக்கியா G21 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் நோக்கியா G21 ஸ்மார்ட்போனை இப்போது அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
இந்த போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான G20 ஸ்மார்ட்போனை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா C01 பிளஸ் போனில் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட புதிய வேரியண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை & சிறப்பு அம்சங்கள்: 6.5 இன்ச் டிஸ்பிளே, யுனிசோக் T606 சிப், 5050 mAh பேட்டரி, 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி, பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு விதமான வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி போன் 12,999 ரூபாய்க்கும், 6ஜிபி போன் 14,999 ரூபாய்க்கும் கிடைக்கும் என தெரிகிறது. இந்த போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட C01 பிளஸ் போன் 6,199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.