நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.
அதில் 400 மில்லியன் டொலர் நிதி உதவியை முதல் கட்டத்தின் கீழ் விரைவில் வழங்குவதாக உலக வங்கியின் இலங்கை சட்ட பிரதிநிதி சியோ கென்டா தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் பிரதிநிதி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று மாலை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் சியோ கென்டா இதனை தெரிவித்துள்ளார்.
மருந்து மற்றும் சுகாதார உதவி, சமூக பாதுகாப்பு, விவசாயம் மற்றும் எரிவாயு அவசியத்தை தீர்ப்பதற்காக இந்த பணம் வழங்கப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.