உக்ரைன் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பிரேத பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது.
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷ்ய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகியுள்ளது.
அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக சீரழிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.