உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செர்ஜி லாவ்ராவ், நல்லெண்ணம் என்பதற்கு ஒரு அளவு இருப்பதாகவும், எதிர் தரப்பில் இருந்து அதற்கான பிரதிபலன் இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கு அது உதவாது என தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்த லாவ்ராவ், அவரது பேச்சில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும் , அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதை போல நடிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், 3ஆம் உலக போர் என்ற அபாய சூழல் உருவாவதை குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்த அவர், உக்ரைன் உடனான பிரச்னை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வரும் என தான் நம்புவதாக கூறினார்.