எலான் மஸ்க்
ட்விட்டரை வாங்கிய பிறகு, இதுகுறித்து
ட்விட்டர்
நிறுவனர்களில் ஒருவரான
ஜாக் டோர்சி
கருத்து தெரிவித்துள்ளார். ஜாக் டோர்சி கடந்த ஆண்டு வரை ட்விட்டரின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலராக செயல்பட்டு வந்தார்.
தொடர்ந்து, ட்விட்டரை வாங்குவதற்காக டெஸ்லா தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் அறிவித்த சலுகையை அவர் ஏற்றுக்கொண்டார். உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், கடந்த 10 நாள்களுக்கு முன்பு சமூக வலைதளமான ட்விட்டரை வாங்குவதற்கான விருப்பத்தை வெளியிட்டார்.
உண்மையில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு மாத தொடக்கத்தில் இருந்தே முயற்சி செய்து வந்தார். அவர் ஆரம்பத்தில் நிறுவனத்தின் 9.2% விழுக்காடு பங்குகளை வாங்கினார். பின்னர் அவர் நிறுவனத்தை 44 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் கோடி கொடுத்து வாங்க முன்வந்தார்.
பில் கேட்ஸை சீண்டிய எலான் மஸ்க் – வைரலாகும் புகைப்படம்!
ஜாக் டோர்சி என்ன சொன்னார்?
எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியது தொடர்பாக, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அலுவலரும், நிறுவனர்களில் ஒருவருமான Jack Dorsey தற்போது மனம் திறந்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ட்விட்டர் பொது உரையாடலைத் தொடரும். அத்தகைய தளத்தை உருவாக்குவதே Elon Musk-இன் குறிக்கோள். இது முடிந்தவரை உண்மையாகவும் விரிவானதாகவும் இருக்க வேண்டும்.
அதுவே நன்றாக இருக்கும். இதுவே பராக் அகர்வாலின் குறிக்கோளும் கூட. அதனால்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன். நிறுவனத்தை சாத்தியமற்ற சூழ்நிலையிலிருந்து மீட்டெடுத்த இருவருக்குமே நன்றி. இதுவே சரியான வழி. இதை நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று ஜாக் டோர்சி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி… அதிர்ச்சியடைந்த ரஷ்யா!
ட்விட்டர் ஒரு மாதத்திற்குள் எப்படி விற்கப்பட்டது
ஏப்ரல் 25, 2022 அன்று இரவு, ட்விட்டர் தலைமை, எலான் மஸ்க் இணைந்து ஒப்பந்தத்தை இறுதி செய்வதாக அறிவித்தனர். ஒப்பந்தம் முடிந்ததும் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவார் என்று ஒரு செய்திக்குறிப்பின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் பொது பங்கு தளத்தில் இயங்கி வரும் இந்நிறுவனம், மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு தனியார் மயமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக எலான் மஸ்க் வெளியிட்டிருந்த அறிக்கையில், “புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலம் மக்களிடத்தில் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். ஸ்பாம்போட்களை களை எடுப்பதன் மூலமும், ஓபன் சோர்ஸ் அல்காரிதங்களை உருவாக்குவதன் வாயிலாகவும் ட்விட்டரை மேம்படுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… உங்கள் கருத்துகளை கீழே பதிவிடவும்