உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஹோல்சிம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்த நிலையில், இந்நிறுவனத்தின் கட்டப்பாட்டில் இருக்கும் இரு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகியவை விற்பனைக்கு வந்தது.
இல்லதரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. சர்வதேச நிலவரம் என்ன?
கௌதம் அதானி
இந்த நிறுவனங்களைக் கைப்பற்ற பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதால் பல முன்னணி நிறுவனங்கள் தயங்கினாலும், இந்தியாவின் பெரும் பணக்காரர், உலகின் 5வது பெரும் பணக்காரரான கௌதம் அதானி தற்போது இவ்விரு நிறுவனங்களையும் கைப்பற்றும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளார்.
ஹோல்சிம் நிறுவனம்
ஹோல்சிம் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரு நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகியவற்றின் வருடாந்திர மொத்த உற்பத்தி அளவு 66 மில்லிடன் டன்னாகும். இந்நிலையில் இந்நிறுவனங்களைக் கைப்பற்றுவது மூலம் ஒரு நிறுவனம் எளிதாக இந்தியாவின் 2வது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்க முடியும்.
10 பில்லியன் டாலர்
ஆனால் விலை தான் 10 பில்லியன் டாலர். ஹோல்சிம் மற்றும் அதானி குரூப் மத்தியிலான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதானி குழுமத்திற்குக் கடன் உதவி வழங்க சர்வதேச வங்கிகளான பார்க்லேஸ், டாய்ச் வங்கியும், இந்திய வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகளும் நிதி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு உள்ளது.
இறுதி கட்டம்
இரு தரப்புக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் மட்டுமே இருக்கும் காரணத்தால் இந்த ஒப்பந்தம் நிறைவேறுமா அல்லது பங்குதாரர்களின் ஒப்புதல்கள் கிடைக்குமா என்பதற்கு இன்னும் உத்தரவாதம் இல்லை. இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
JSW, அல்ட்ராடெக்
ஹோல்சிம் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரு நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களைக் கைப்பற்ற JSW நிறுவனமும் போட்டிப்போட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ராடெக் முயற்சி செய்யவில்லை.
Adani group in final discussion on buying ACC and Ambuja cement; $10 billion deal
Adani group in final discussion on buying ACC and Ambuja cement; $10 billion deal ஏசிசி, அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களைக் கைப்பற்றப் போகும் அதானி குரூப்..!