இலங்கை முதலீட்டு சபை தலைவர் ராஜ எதிரிசூரிய ,வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஏறாவூர் புன்னக்குடா ஆடைக் கைத்தொழிற் பூங்கா வலயத்திற்கு இன்று 26.04.2022 உத்தியோகபூர்வ கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேனுகா எம்.வீரகோன், சபையின் வலய நிறைவேற்று பணிப்பாளர் எம்.கே.டீ.லோரஸ், உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியளாளர் எந்திரி ஏ.எம்.றிஸ்வி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் டீ.ஏ.பிரகாஸ்
மற்றும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் ஏனைய திணைக்களகங்கள் சார் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அத்தோடு, ஏறாவூர் புன்னக்குடா ஆடைக் கைத்தொழிற் பூங்கா வலயம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலொன்று இலங்கை முதலீட்டாளர் சபை தலைவர் ராஜ எதிரிசூரிய தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட திட்டத்துடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்னர்.
இத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட அடிப்படை பணிகள் பூர்த்தியான நிலையில், இரண்டாம் கட்ட வேலைகளாக நீர் வழங்கல் மற்றும் வடிகானமைப்பு சபை, மின்சாரம் மற்றும் வீதி அபிவிருத்தி ஆகிய வேலைத்திட்டங்கள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக இதன்போது சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை ஆடைக் கைத்தொழிற் பூங்கா வலயத்தில் முதலீடு செய்வதற்கு தாம் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.