ஐ.நா. மத்தியஸ்தம் செய்ய முயற்சி| Dinamalar

ஐ.நா: உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷ்யா, உக்ரைன் இடையே மத்தியஸ்தம் செய்ய களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ன்டோனியோ குட்டரெஸ் ரஷ்யா- உக்ரைன் இடையே மத்திஸ்தம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக வரும் 25-ம் தேதி ரஷ்யா சென்று, அதிபர் விளாடிமிர் புடினையும், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவையும் சந்தித்து பேச உள்ளதாகவும், வரும் 28-ம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தும் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.