பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் பல்கலை கழகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 சீன பிரஜைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குண்டுவெடிப்பு காரணமாக மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கராச்சி பல்கலைக்கழகத்தில் மதியம் 1:52 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது என கூறப்படுகிறது. கராச்சி பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெடி விபத்துக்குள்ளான வேனில் ஏழு முதல் எட்டு பேர் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
வேன் மீது வாகனம் ஒன்று மோதியதால் வெடி விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். வெளியூர்களில் இருந்து வந்த குறிப்பிட்ட காரின் எண் யாருடையது என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் கராச்சியில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆப்கானிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு; 22 பேர் பலி, பலர் காயம்
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் பாதுகாப்பு படையினர் சமப்வம் நடந்த இடத்தை அடைந்துள்ளனர். அப்பகுதி முழுவதையும் அவர்கள் சுற்றி வளைத்து, மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கராச்சி பல்கலைக்கழகத்தில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீன பிரஜைகள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் மஜீத் பிரிகேட் என்னும் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஷாரி பலோச் என்ற பெண் இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தினார் என கூறினார்.
மேலும் படிக்க | Elon Musk – Twitter: டிவிட்டரை மொத்தமாக வாங்க தயாராகும் எலான் மஸ்க்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR