பெங்களூரு:
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. நேற்று 4,637 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 64 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தட்சிண கன்னடாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. நேற்றும் உயிரிழப்பு இல்லை.
இதுவரை 39 லட்சத்து 46 ஆயிரத்து 998 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 57 பேர் இறந்து உள்ளனர். நேற்று 69 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 39 லட்சத்து 5 ஆயிரத்து 228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1,671 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு 1.38 சதவீதமாக உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கர்நாடகாவில் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம். பிரதமருடன் வருகிற 27ந்தேதி (நாளை) நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு மத்திய அரசு வழங்கும் அறிவுறுத்தலின்படி நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து வருகின்றன. ஆனால், பயப்பட வேண்டிய அவசியமில்லை. பெருந்தொற்றை கட்டுப்படுத்த எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்…எவ்வளவு செலவானாலும் கடல்நீர் உட்புகுவதை தடுத்தே தீருவோம் – அமைச்சர் துரைமுருகன் உறுதி