காங்கிரஸ் கட்சியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சிக்கு புதிய முகமும், புதிய வியூகமும் தேவை என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அக்கட்சியை சரிவில் இருந்து மீட்பது தொடர்பான வரைவு திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வழங்கினார் அதன் பின்னர், அவர் காங்கிரசில் இணைவார் என கூறப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தனக்கு அளித்த தேர்தல் பொறுப்பை மறுப்பதாக சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், கட்சிக்கு தனது தேவையை விட, கட்டமைப்பு ரீதியாக ஆழமாக உள்ள பிரச்னைகளை சீர்திருத்த தலைமை தான் தேவை என கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.