புதுடில்லி : பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கரை, கட்சியிலிருந்து இரண்டு ஆண்டு களுக்கு ‘சஸ்பெண்ட்’ செய்ய, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்து உள்ளது.பரபரப்புபஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்தது.இதையடுத்து, ‘காங்கிரசின் தோல்விக்கு, முதல்வராக இருந்த சரண் ஜித் தான் காரணம்’ என, பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கடுமையாக விமர்சித்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ், அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று, ‘நேரு – இந்திரா குடும்பத்தைச் சேராத ஒருவர் தான், காங்கிரஸ் தலைவராக வேண்டும்’ என்றார். இதுவும் பரபரப்பை கிளப்பியது. அடுத்து, வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட் சங்மா தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, காங்கிரசைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், ஆளும் கூட்டணிக்கு கடந்த பிப்ரவரியில் ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில், காங்., கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கூட்டம், குழுவின் தலைவர் அந்தோணி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில், பஞ்சாப் மாநில முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கரை, கட்சியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்ய, கட்சி மேலிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள்அடுத்து, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் கே.வி.தாமசை நீக்கவும், மேகாலயாவில் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ஐந்து எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யவும், கூட்டத்தில் பரிந்துரைக்கப் பட்டது.