கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
பெருந்தொற்றின் 4வது அலை ஏற்படும் என்ற அச்சம் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி காலை இறை வணக்க கூட்டம், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும், அரசு மருத்துவமனை அல்லது மருந்தகங்களில் 250 ரூபாய் மதிப்புள்ள பூஸ்டர் டோஸை இலவசமாகப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.